×

விக்கிரவாண்டி வட்டத்தில் 3ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

விக்கிரவாண்டி, மே 29: விக்கிரவாண்டி வட்டாட்சியர் சுந்தர்ராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,விக்கிரவாண்டி வட்டத்தில் ஜமாபந்தி வரும் ஜூன் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது. (சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் நீங்களாக). வருவாய் தீர்வாய அலுவலராக விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமை தாங்கி மனுக்களை பெற உள்ளார்.  சித்தலம்பட்டு குறு வட்டத்திற்கு வரும் ஜூன் 3, 4 ஆகிய தேதியிலும், அன்னியூர் குறு வட்டத்திற்கு 7ம் தேதியும், கஞ்சனூர் குறு வட்டத்திற்கு 10, 11 ஆகிய தேதிகளிலும், விக்கிரவாண்டி குறு வட்டத்திற்கு 12ம் தேதி அன்றும்ஜமாபந்தி நடக்கிறது. இதனால் விக்கிரவாண்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

Tags : Jamapanti ,Wriarvandi ,
× RELATED மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியும்...