×

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இலவசமாக அமரர் ஊர்தி வழங்க பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு

திருவெண்ணெய்நல்லூர், மே 29: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களில் யாரேனும் விபத்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டால் அமரர் ஊர்தியை பெற  பேரூராட்சிக்கு சென்று விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே இறந்தவரின் உடலை அமரர் ஊர்தியில் எடுத்து செல்ல முடியும். இதில் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவர் பணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டால் அமரர் ஊர்தி பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த அவல நிலையை போக்க அமரர் ஊர்தியை பேரூராட்சி நிர்வாகம் இலவசமாக தர கூடுதலாக அமரர் ஊர்தியை வாங்கி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹேமராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் டிஎஸ் முருகன், அமமுக நகர செயலாளர் வழக்கறிஞர் சோலையப்பன், தேமுதிக செயலாளர் முருகன் ஆகியோர் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் இதுபற்றி தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மனுவைப் பெற்ற பேரூராட்சி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.







Tags : Panchayat Executive Officer ,Employer ,area ,Travancore ,Tiruvanneynallur ,
× RELATED வாட்டி வதைக்கும்...