×

பிளஸ்-2 சிறப்பு துணை தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்

புதுச்சேரி, மே 29:  புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 2019 ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 சிறப்பு துணை தேர்வெழுத அரசு தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) இன்று (29ம் தேதி) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட் என்ற வாசகத்தை க்ளிக் செய்ய வேண்டும். கீழ் குறிப்பிட்ட வகை தேர்வர்களுள் தாங்கள் எந்த வகையை சார்ந்தவர் என்பதை பொறுத்து கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பழைய நடைமுறையில் (200 மதிப்பெண்) தேர்வு எழுதுவோர், திரையில் தோன்றும் பக்கத்தில் HSE JUNE 2019 SECOND YEAR HALL TICKET DOWNLOAD (old pattern 1200 marks) என்ற வாசகத்தினை Click செய்ய வேண்டும். மார்ச் 2019, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள், பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடியாக ஜூன் 2019 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தமது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 புதிய நடைமுறையில் (600 மதிப்பெண்) தேர்வு எழுதுவோர்: திரையில் தோன்றும் பக்கத்தில் HSE JUNE 2019 SECOND YEAR HALL TICKET DOWNLOAD (new pattern 600 marks) என்ற வாசகத்தை Click செய்ய வேண்டும்.மார்ச் 2019, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள், பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடியாக ஜூன் 2019 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தமது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய நடைமுறையின்படி (1200 மதிப்பெண்) தேர்வு எழுதும் தனி தேர்வர்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வில் பங்கேற்காதோர் மட்டும் மொழி பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுக்கு / சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வுக்கு தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.

 மேலும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஜூன் 2019 சிறப்பு துணை தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...