நகைக்கடை உரிமையாளர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்தவர் மீது வழக்கு

சங்கரன்கோவில், மே 29: சங்கரன்கோவிலில் நகைக் கடை உரிமையாளர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (45). சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் நகைக்கடை நடத்தி வருவதோடு செங்குந்தர் சமுதாய அமைப்புகளில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இதனிடையே சங்கரன்கோவில் நகர செங்குந்தர் சமுதாய தேர்தல் நடத்துவது தொடர்பாக இவரது தரப்பினருக்கும், அதே சமுதாயத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் மாரிமுத்து சகோதரியின் மகனும், தேமுதிக சங்கரன்கோவில் நகரச் செயலாளருமான ரத்தினக்குமார் என்பவர், ஏற்கனவே முதல்திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 17ம் தேதி  சங்கரன்கோவிலைச் சேர்ந்த பிரமு அம்மாளின் மகளான சங்கரம்மாளை விரும்பி 2வதாக திருமணம் செய்துகொண்டாராம். ஆனால், மாரிமுத்துதான் இத்திருமணத்தை நடத்தி வைத்தார் என்றும், அவரை பற்றி சமூகவலைதளங்களில் அவதூறாகவும் ராமநாதன் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jeweler owner ,
× RELATED பிரியங்கா காந்தியா? பிரியங்கா...