×

தண்டுபத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உடன்குடி,மே29: தண்டுபத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு  தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடன்குடி யூனியனுக்குட்பட்ட மாநாடு தண்டுபத்து ஊராட்சி நடுத்தெருவில் உள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவாரத்திற்கும் மேலாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. குழாயில் உடைப்பு காரணமாக தண்ணீர் வரும் நேரங்களில் அதிக அளவில் வீணாக செல்கிறது. குடிநீர் குழாய் உடைப்பு குறித்து பொது மக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.




Tags :
× RELATED சாத்தான்குளம் தேவாலயத்தில் சுற்றுச்சூழல் ஞாயிறு கொண்டாட்டம்