×

படகுகள் நிறுத்துவதில் இருதரப்பினர் மோதல் பெரியதாழையில் மீனவர்கள் ஸ்டிரைக் வாபஸ் தாசில்தார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சாத்தான்குளம் மே 29: பெரியதாழையில் பைபர் படகுகள் நிறுத்துவதில் ஏற்பட்ட  பிரச்னை காரணமாக 2நாள்கள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து  தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து இன்று முதல்  போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்கின்றனர்பெரியதாழையில் தூண்டில் வளைவு பிரச்னையால் கடற்கரையில் கடல் அரிப்பு உண்டாகி பைபர் படகுகள் நடுத்தெருவில் நிறுத்துவது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் கீழத்தெருவில் உள்ளவர்களிடம் பேசி அப்பகுதியில் சில படகுகளை விட்டு வந்தனர். நாளடைவில் அதிக படகுகள் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கீழத்தெரு மீனவர்களுக்கு படகுகள் நிறுத்துவது பாதிக்கப்பட்டது. இதில் அவர்களுக்குள் பிரச்னை உண்டாகி மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை.

 மீனவர்கள் இருதரப்பினரும் மாறி மாறி புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஞானராஜ் தலைமையில் இருதரப்பினரிடமும் சமாதானக்கூட்டம் நேற்று நடந்தது இதில் மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்பிரமணியன் மண்டலதுணைத்தாசில்தார் சுவாமிநாதன், தட்டார்மடம் எஸ்.ஐ தேவராஜ், வருவாய் ஆய்வாளர் பிரபு, மீனவர் சங்கத் தலைவர்கள் மேலத்தெரு டெல்வர், நடுத்தெரு ரமேஷ், கீழத்தெரு ராஜேஷ், மீனவர்கள் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கெனிட்டன் மற்றும் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில் மூன்று தெரு மீனவர்களும் அவரவர் பகுதிகளிலேயே பைபர் படகுகளை முன்னும் பின்னும் நிறுத்த வேண்டும். படகு நிறுத்தும் இடத்தை சுத்தம் செய்வது சமப்படுத்துவது ஆகிய பணிகளை கீழத்தெரு மற்றும் நடுத்தெரு மீனவர்கள் செய்யவேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது என உறுதி அளித்தனர்.


Tags : Confrontation ,
× RELATED மெக்சிகோவில் பயங்கரம்!: பேருந்தும்...