திருவண்ணாமலை அருகே ஹார்லிக்ஸ் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து

திருவண்ணாமலை, மே 29: திருவண்ணாமலை அருகே ஹார்லிக்ஸ் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றியதால் அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளில் சரக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது, டோல்கேட் அருகே லாரியை டிரைவர் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக லாரியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந் டிரைவர் உடனடியா லாரியில் ஏறி பார்த்துள்ளார். அப்போது, வண்டியிலிருந்த ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பற்றி எறிய தொடங்கியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடி தீயை முழுவமையாக அனைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு பகுதியில் இருந்த ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள், பாட்டில்கள் எரிந்து நாசனமானது. தகவல் அறிந்து சம்வ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் இது குறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவையிலிருந்து ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள், பாட்டில்கள் ஏற்றிக்கொண்டு, பாட்னாவிற்கு சென்று கொண்டிருந்த போது, திடீரென தீப்பற்றி எறிந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மேலும் போலீசார், தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fire ,Harris ,Thiruvannamalai ,
× RELATED மின்சார ஒயர் உரசி லாரி தீப்பிடித்து எரிந்தது