×

திருவண்ணாமலையில் பஸ்களில் பொருத்தியிருந்த 100 ஏர்ஹாரன்கள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருவண்ணாமலை, மே 29: திருவண்ணாமலையில் பஸ்களில் பொருத்தியிருந்த 100 ஏர்ஹாரன்களை கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாரிகள் அகற்றினர். தினகரன் செய்தி எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்தனர்.தீபத்திருநகராம் திருவண்ணாமலைக்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வியாபார நிமித்தமாகவும், இங்குள்ள அண்ணாமலையாரை தரிசிக்கவும் வந்து செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். மாதம் தோறும் பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்புகழ்மிக்க திருவண்ணாமலையில் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் திருவண்ணாமலையில் வசிக்கும் பொதுமக்களும், பக்தர்களும் கடுமையாக அவதிப்பட்டனர்.

இதில் அதிகாரிகள் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்ஹாரனை பறிமுதல் செய்ய வேண்டும் என கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகாசினி ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த 100 ஏர்ஹாரனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை நகரில் பஸ்களில் ஏர்ஹாரன் பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஏர்ஹாரனை பறிமுதல் செய்துள்ளோம். இனியும் ெதாடர்ந்து ஏர்ஹாரனை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும்'''' என்றனர்.

Tags : Airhurrents ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...