×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் 2 நாட்களாக ஏசி பழுது: உடல்கள் ராயப்பேட்டைக்கு மாற்றம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் உள்ள பிணவறையில் ஏற்பட்ட ஏசி பழுது காரணமாக, உடல்கள் அனைத்தும் ராயப்பேட்டை அரசு மருத்துவனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீரிழிவு மற்றும் தீக்காயம் ஆகியவற்றிற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், இங்குள்ள பிணவறை அதிநவீன முறையில் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 50 சடலங்கள் வரை பாதுகாத்து வைக்க முடியும். இந்த நிலையில், பிணவறையில் உள்ள குளிரூட்டும் இயந்திரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென பழுதானது. இதனால், பிணவறை முழுவதும் ஏசி இயங்காமல் உடல்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

எனவே, இங்குள்ள பிணங்கள் பாதுகாப்பாக அவசரம் அவசரமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்று ஊழியர்கள் இணைந்து ஏசி இயந்திரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரேத பரிசோதனைகள் அனைத்தும் ராயப்பேட்டை பிணவறையில் நடந்து வருகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனை டீன் வசந்தாமணி செய்து வருகிறார்.

Tags : AC ,Government Hospital ,Royapettah ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...