×

ஜெ.ஜெ நகரில் தீயணைப்பு வாகனம் கடையில் புகுந்தது

அண்ணாநகர்: சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த தீயணைப்பு வாகனம், செல்போன் கடையில் வேகமாக மோதியது. சென்னை ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு அலுவகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட தீயணைப்பு வாகனம், அங்குள்ள வளையாபதி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த செல்போன் கடையில் மோதி, உள்ளே புகுந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் ஓட்டியவர் போலீஸ் என்பதால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை.

Tags : fire brigade ,
× RELATED குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன