×

தாவரவியல் பூங்கா மலர் அலங்காரம் தொடர்ந்து வைக்க முடிவு

ஊட்டி, மே 28:  சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளாதல், தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்கள் மேலும் சில நாட்களுக்கு வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  ஆண்டு தோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இம்முறை கடந்த 17ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடந்தது.

மலர் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்காவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மலர்களால் ஆன பாராளுமன்ற கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பிரமாண்ட மலர் கூடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 10 அலங்கார வளைவும், 30 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 தற்போது, காய்ந்து போன மலர் அலங்காரம் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. மற்ற மலர்களை கொண்டு மாடங்களில் மீண்டும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். குறிப்பாக, 2 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள லில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை பார்ப்பது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேலும் சில நாட்களுக்கு பூங்காவில் மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்த வாரம் இறுதி வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்கலாம்.

Tags : botanical garden ,
× RELATED கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்