×

குன்னூர் - ரன்னிமேடு சிறப்பு ரயில் அதிக கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊட்டி, மே 28:   குன்னூர் - ரன்னிமேடு இடையே நீராவி இன்ஜினில் இயங்க கூடிய பல்சக்கர தண்டவாளத்தில் செயல்பட கூடிய சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது. இதன்படி இந்த சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது. இதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குன்னூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இந்த சிறப்பு ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.475ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.320ம் வசூலிக்கப்பட்டது.

குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ரன்னிமேடு பகுதிக்கு செல்வதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிக அதிகம் என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் இயக்கப்படும் ரயிலில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சிறப்பு ரயில் என்ற பெயரில் மலை ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஊட்டிக்கு வர கூடிய நடுத்தர சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணிப்பது சிரமம். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Coonoor - Rannimedu ,
× RELATED குன்னூர்- ரன்னிமேடு இடையே கூடுதல் மலை...