கஞ்சா கடத்திய 3 பேர் கைது

பாலக்காடு, மே 28:   தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 8 கிலோ கஞ்சா  கடத்திய 3 வாலிபர்களை பட்டாம்பி போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,சுரேஷ் தலைமையிலான போலீசார் பட்டாம்பி பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக 3பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் கோம்பிப்பட்டியை சேர்ந்த முருகன் (52), கனகராஜ் (52)  பாலக்காடு குன்னத்தூர்மேடு சிரக்காட்டை சேர்ந்த ஷர்புதீன் (36) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து பட்டாம்பி போலீசார் அவர்களை கைது செய்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Kanja ,
× RELATED மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 3 பேர் சாவு