×

கோவை அரசு மருத்துவமனையில் எம்.சி.ஐ அதிகாரிகள் ஆய்வு

கோவை, மே 28: கோவை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்புமூட்டு துறையில் முதுகலை மருத்துவ இடங்கள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மருத்துவ கல்லூரிகளில் கோவை அரசு மருத்துவமனையின் எலும்பு, மூட்டு துறையில் கடந்த ஆண்டு முதுகலை இடங்கள் அதிகரிக்கப்பட்டது. இந்த இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு ஆய்வு நடத்தப்படும்.

இதில், மாணவர்களின் திறன், நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை, மருத்துவமனையின் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும். அதன்படி, நேற்று எம்.சி.ஐ அதிகாரிகள் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் எலும்பு, மூட்டு துறையில் அதிகரிக்கப்பட்ட இடங்கள் குறித்த மாணவர்களின் திறன், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், எம்.சி.ஐ அதிகாரிகள் திருப்தி அடைந்ததாக மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்தார்.

Tags : MCI ,Coimbatore Government Hospital ,
× RELATED ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில்...