கோயில் திருவிழாவில் மைக் செட் சேதம் போலீஸ் மீது நடவடிக்கை கோரி இலுப்பூர் அருகே சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு

இலுப்பூர், மே 28: இலுப்பூரில்  அருகே திருவிழாவில் மைக்செட் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் கிடந்த சேற்றை சேதப்படுத்தி மைக்கை பிடிங்கி சென்ற போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைபெற்றது. இப்போது விழா குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அனுமதி பெற்று ஒலி பெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று அதன் வழியே சென்ற கரூர் மாவட்டத்தில் எஸ் ஜ யாக பணி புரியும் முத்து என்பவர் மைக்செட் அமைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே சென்று ஒலியின் அளவை குறைத்து வையுங்கள் என்று  கூறி மைக்கை பிடிங்கி  அங்கு கிடந்த  சேற்றை சேதப்படுத்தி மைக்கை பிடிங்கி எடுத்துக்கொண்டு  இலுப்பூர் ஸ்டேசனில் கொடுத்து விட்டு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மைக்கை பிடிங்கி  மைக் செட்டை சேதப்படுத்திய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் சாலை மறியில் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பூர் டிஎஸ்பி  சகாமணி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவே மறியல் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

Related Stories: