×

பொன்னமராவதி சந்தையில் காய்கள் அளவு குறைகிறது தராசு, எடைக்கல்லில் அரசு முத்திரை உள்ளதா? அதிகாரிகள் ஆய்வு நடத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி, மே 28: பொன்னமராவதி சந்தை மற்றும் மார்க்கெட்டில் தராசு மற்றும் எடைக்கல் போன்றவற்றில் அரசு முத்திரை உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் வாரம் இரண்டு நாட்கள் சந்தை நடப்பது பொன்னமராவதிக்கு தனிச்சிறப்பு. இந்த சந்தைக்கு புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைச்சேர்ந்த பொதுமக்கள் வந்து காய்கள் வாங்கிச்செல்கின்றனர். இங்கு வாங்கப்படும் காய்கள் ஒரு சில கடைகளில் குறைவாக உள்ளதாக பொதுமக்கள் பல ஆண்டுகளாக கூறுகின்றனர். ஒரு கிலோவுக்கு கால் கிலோ குறைகின்றது. மேலும் பல கடைகளில் தராசில் அரசு முத்திரை போடுவதில்லை. கணினி தராசு மூலம் முறைகேடுகள் நடக்கின்றது. கிராமப்புறங்களில் இருந்து வரும் அப்பாவி பொதுமக்கள் ஜீரோ எடை அளவுகளை பார்க்காமல் வாங்கிச்செல்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பொன்னமராவதி சந்தை மற்றும் தினசரி மார்க்கெட், கடைகளில் தராசு எடை கற்களை ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : investigations ,inspection ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...