இலுப்பூர் அடுத்த நவம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

இலுப்பூர், மே 28: இலுப்பூர் அருகே நவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன், சந்தனகருப்பு கோயில் திருவிழா நேற்று நடைபெற்து. இலுப்பூர் அருகே நவம்பட்டியில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா கடந்த 20 தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழா துவங்கிய நாள் முதல் தினமும் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய விழாவான பால்குட விழா நேற்று முன்தினம்   நடைபெற்றது. விழாவையொட்டி நவம் ஊரணியில் இருந்து பக்தர்கள் காவடி, பால்குடம், முளைப்பாரி, கரும்பு தொட்டில் எடுத்து கோயிலை வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை நிறை வேற்றினர். பால்குட விழாவில் நவம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  விழாவின் மற்றொரு நிகழ்ச்சியான திருவிழா நேற்று நடைபெற்றது.. விழாவையொட்டி நவம் ஊரணியில் இருந்து பக்தர்கள் கரகம் பாலித்து கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அதை தொடர்ந்து கிடாவெட்டி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று (28ம்தேதி) கரகம் குளத்தில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சல் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags : festival ,Nambampatti Muthuramaniyanam ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா: இன்று விநாயகர் உற்சவம்