புதுக்கோட்டையில் மாவட்ட அளவில் வலு தூக்கும் போட்டி

புதுக்கோட்டை, மே 28: புதுக்கோட்டை மாவட்ட ஸ்டென்த் லிப்டிங் அசோஷியேசன் சார்பில் மாவட்ட அளவிலான வலு தூக்கும் போட்டிகள் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டி துவக்க விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஸ்டென்த் லிப்டிங் அசோஷியேசன் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். இதில் ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 75 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி உடையவர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வலு தூக்கும் வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், நகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukottai ,
× RELATED இன்று மாவட்ட அளவிலான திறன் போட்டி