×

கீழப்பெருங்கரை பகுதியில் பருத்தி செடிகளை நாசப்படுத்தும் மான்கள் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

பரமக்குடி, மே 28:  பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மான்கள் புகுந்து செடிகளை துவசம் செய்வதால், செடிகள் அழிந்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டி அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பரமக்குடி அருகே உள்ளது கீழப்பெருங்கரை கிராமம். இந்த கிராமம் விவசாயத்திற்கு பெயர் பெற்றது. இந்த கிராமத்தில் நெல்,மிளகாய், பருத்தி உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருத்தி, எள் மற்றும் பயறு வகைகள் பயிரிட்டுள்ளனர்.

வனப்பகுதிகளையொட்டி பருத்தி 20 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் உள்ள மான், காட்டு எருமைகள், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் விவசாய செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளை சேதப்படுத்தி வருகிறது. நேற்று மச்சராஜா என்பவரின் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திகளை மான்கள் சேதப்படுத்தியுள்ளது. ஆண் மான்கள் தனது கொம்புகளை கொண்டு செடிகளை உடைத்து நாசம் செய்துள்ளது. தொடர்ந்து வனத்துறைக்கும், விவசாயத்துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மச்சராஜா கூறுகையில், விவசாய நிலங்களையொட்டி வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக மான் மற்றும் காட்டு எருமைகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதை தடுக்க தற்காப்பு நடவடிக்கை எடுத்தால் வனவிலங்களுக்கு உயிர் பாதுகாப்பு இருக்காது என்பதால் அதிகாரிகளிடம் சென்னால் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : cotton plants ,sighting officers ,Keebperangarai ,
× RELATED ராமநத்தம் பகுதியில் பருத்திச்செடிகளை சேதப்படுத்தும் குரங்குகள்