×

அம்மாசத்திரத்தில் பைரவருக்கு அஷ்டமி பூஜை

கும்பகோணம், மே 28: கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரத்தில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் சதுர்கால பைரவர் சுவாமிக்கு  அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.நேற்றுமுன் தினம்  மாலை 5 மணி முதல் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் பைரவர் சுவாமிக்கு வெள்ளி கவசம், வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான உலக நன்மைக்காகவும் பிராத்தனை செய்து கொண்டனர். தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Ashtami Puja for Bhairavar ,
× RELATED விஷம் குடித்த தாய் சாவு