×

புதுவையில் இருந்து நாகைக்கு சாராயம் கடத்தி வந்த 3 பேர் கைது.

நாகை, மே28: பாண்டிச்சேரியில் இருந்து நாகைக்கு விஷ சாராயம் கடத்தி வந்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பாண்டிச்சேரியில் இருந்து நாகைக்கு விஷ சாராயம் கடத்துவதாக நாகை எஸ்பி விஜயகுமாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகூர் வெட்டாற்று பாலம் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பாண்டிச்சேரி விஷ சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாலித்தீன் பையில் இருந்த 110 லிட்டர் விஷசாராயத்தையும் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் நாகை அருகே சங்கமங்களம் மேட்டு தெருவை சேர்ந்த ராஜு (30), சன்னமங்களம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மாதவன்( 35) என்பதும் தெரியவந்தது.
இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அதேபோல் மேல வாஞ்சூர் முட்டம் பகுதியில் வாகன சோதனையில் நாகூர் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் பாண்டிச்சேரி விஷ சாராய பாக்கெட்டுகள கடத்தி வந்தது தெரியவந்தது.


விசாரணையில் அவர் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கருட பாளைய தெருவை சேர்ந்த மனோகர்(50) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 110 லிட்டர் விஷ சாராயம் மற்றும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரை கைது செய்தனர்.

Tags : Nagam ,
× RELATED தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...