×

கூத்தாநல்லூர் பகுதியில் வியாபார நிறுவனங்களில் பதுக்கிய பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி ஆணையர் அதிரடி

கூத்தாநல்லூர், மே 28: கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நிறுவனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் பறிமுதல் செய்து அபராதம் விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் நிலத்தடி நீரை உயர்த்தவும், மாசில்லாத சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கவும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடைசெய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் வியாபார நிறுவனங்களும், நுகர்வோரும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் உடனடியாக கண்காணிக்கப்பட்டு பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் ராஜகோபால் தலைமையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோரிடம் அவைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் பயன்படுத்துவோருக்கு உடனடி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நூற்றுக்கணக்கான கிலோ எடைகள் கொண்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு கண்டறியப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அரியலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொhருளாக அனுப்பி வைக்கப்பட்டு அழிக்கப்படுகின்ன.

இதன் தொடர்ச்சியாக  கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருப்பதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் வரவே உடனடியாக ஆணையர் ராஜகோபால் தலைமையில் அதிகாரிகள் புறப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது சில வியாபார நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.10000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.  அதேபோல் சிறுகுறு வணிக நிறுவனங்களிலும், இறைச்சி, மீன், காய்கறி கடைகள், டீ கடைகள்  உள்ளிட்ட வியாபார கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டதோடு, அவைகள் பயன்படுத்தப்படுகின்றனவா என தீவிர  கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : commissioner ,area ,Koothanallur ,business companies ,
× RELATED வெள்ளம் பாதித்த குடியிருப்புகளை...