×

திரவுபதியம்மன் கோயிலில் அரவான் கலப்பலி நிகழ்ச்சி

கீழ்வேளூர், மே 28: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுதியம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அரவான் கலப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்ச பான்டவரிகளில் ஒருவரான தர்மனின் தலையை எடுக்க  துரியோதனன்  ஒரு தாயின் ஒரு மகனை வீரமா காளிக்கு அம்மாவாசையன்று  நரபலி கொடுக்க சகாதேவன் நாள் குறித்த நிலையில் இந்த நாளை முன் கூட்டியே அம்மாவாசையை வரவழைத்து  அரவானை  நர பலி கொடுக்க கண்ணபிரான்  ஏற்பாடு செய்து பலி கொடுக்கப்பட்டது. இதனால் துரியோதனன் படை 18ம் நாள் யுத்தத்தில் துரியோதனன் தலை எடுக்கப்பட்டதையடுத்து துரியோதனன் படை தோல்வி அடைந்தது என்பதுதான் அரவான் கலப்பலியாகும்.
இதையடுத்து இலுப்பூர்  திரவுதியம்மன் கோயில் அரவான் கலப்பலியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திரவுதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் வளாகத்தில்  அரவான் கலப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து  திருமண தடை நீங்க, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் பெற ரத்த பலி சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Tags : Aravan ,Tiruvapatiyamman temple ,
× RELATED 10ம் நூற்றாண்டை சேர்ந்த அலம்பூசன் சிற்பம் கண்டுபிடிப்பு