ஓடும் பஸ்சில் ஒரே நாளில் இருவேறு நபர்களிடம் ரூ.50 ஆயிரம் அபேஸ் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை

திருச்சி, மே 28:  திருச்சி  மாநகரில் ஒரே நாளில் காந்தி மார்க்கெட் காவல்சரகம் பகுதியில் ஓடும் பஸ்சில் இருவேறு  நபர்களிடம் ரூ.50 ஆயிரம் திருடிச்சென்ற சம்பவம் பயணிகளிடையே பீதியை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைச் சேர்ந்தவர்  பிரதீப்(30). இவர் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். இங்கு  பால்பண்ணையிலிருந்து மரக்கடைக்கு அரசு பஸ்சில் பயணித்தார். அப்போது அவர்  கைப்பையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச்சென்றுவிட்டனர்.  இது தொடர்பாக பிரதீப் காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதே  போல் லால்குடி வாளாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(64).  இவர் நேற்று முன்தினம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து பால்பண்ணைக்கு  பஸ்சில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் யாரோ அவர் கைப்பையில் வைத்திருந்து  ரூ.25 ஆயிரத்தை அபேஸ் செய்துவிட்டனர்.  இது தொடர்பாக சுப்பிரமணியன்  காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே  நாளில் காந்தி மார்க்கெட் காவல்சரகம் பகுதியில் இருவேறு நபர்களிடம்  ஓடும் பஸ்சில் ரூ.50 ஆயிரம் திருடிச்சென்ற சம்பவம் பயணிகளிடையே பீதியை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: