×

மேலப்புதூர் பகுதி மாணிக்கபுரம் தெருவில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக், குப்பைகள் அடைப்பு நோய் தொற்று பீதியில் மக்கள்

திருச்சி, மே 28: திருச்சி மேலப்புதூர் பகுதி மாணிக்கபுரம் தெருவில் செல்லும் திறந்த வெளி கழிவுநீர் வாய்க்காலில்  பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால் கழிவுநீர் செல்ல வழியின்றி தொற்று நோய் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.  திருச்சி மாநகராட்சியில் 47வது வார்டில் மேலப்புதூர் பகுதி உள்ளது. இங்குள்ள மாணிக்கபுரம் தெருவில் திறந்தவெளி கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்காலில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் இந்த கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக், குப்பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

 இதன் காரணமாக தூற்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் ெதாடர்பு கொண்டு தகவல் அளித்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். தூய்மை நகரம் என மாநகராட்சி சொல்லிவரும் வேளையில் இது போன்ற நிகழ்வுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாநகராட்சி பணியாளர்கள் மாணிக்கபுரம் பகுதியில் உள்ள திறந்தவெளி கழிவுநீர் வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer sewing stream ,area ,Melaputhur ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி