×

அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச பூஜை தொடங்கியது

திருவண்ணாமலை, மே 28: அக்னி நட்சத்திர நிறைவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1008 கலச பூஜை நேற்று தொடங்கியது.திருவண்ணாமலையில் இந்த ஆண்டு அதிகபட்சம் 107.8 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இயற்கையின் சமநிலையற்ற தன்மை காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயில் அதிகரித்து வருகிறது. மேலும், கோடை மழையும் கைகொடுக்கவில்லை.இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சுவாமி சன்னதி கருவறையில் இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர், இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தியடி குளிர்விக்கப்படுகிறது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28ம் தேதி) நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, இரவு 8 மணியளவில் முதல் காலம் 1008 கலச பூஜை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜையும், மாலை 6.30 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலச பூஜையும், பகல் 11 மணிக்கு அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகமும் நடைபெறும். அக்னி நட்சத்திர நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும்.

Tags : Annamalaiyar temple ,Kalasana Puja ,Agni ,occasion ,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...