‘செய்றதை சரியா செய்ய’ கோரிக்கை பழநி எல்லை விரிவாக்கத்தில் ஆயக்குடி பேரூராட்சியை இணைக்க கூடாது

பழநி, மே 28: பழநி எல்லை விரிவாக்கத்தில் ஆயக்குடி பேரூராட்சியை இணைக்கக் கூடாதென வாசன் பாசறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாசன் பாசறையின் மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் ஆயக்குடி செயல் அலுவலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு: ஆயக்குடி பேரூராட்சியில் குடியிருக்கும் பொதுமக்களின் அரசியல் பங்களிப்பு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் முக்கிய வரலாறு ஆகும். 1957ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் எம்.பியாகவும், சட்டசபையில் எம்.எல்.ஏவாகவும் பயன்படுத்தி வந்தனர்.

ஆயக்குடி பொதுமக்களின் அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசியல் முக்கியத்துவத்தை குறைத்தார்கள். அதைப்போல் தற்போது நகர விரிவாக்கம் என்ற பெயரில் ஆயக்குடி பேரூராட்சியை பழநி நகராட்சியுடன் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமேலும், அரசியல் வளர்ச்சியில் ஆயக்குடி பொதுமக்களின் வளர்ச்சியை பின்னடைவு செய்வதாகும். எனவே, ஆயக்குடி பேரூராட்சியை பழநி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Palani ,
× RELATED புதுப்பாளையம் ஊராட்சியில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகள்