×

105டிகிரி முதல் 108 வரை சுட்டெரிக்கிறது கொளுத்தும் கத்தரி வெயிலால் மக்கள் வீடுகளில் முடக்கம்

கரூர்,மே 28:  கொளுத்தும் கத்தரி வெயில் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர், கரூர் மாவட்டத்தில் கத்தரி வெயில் தொடங்கியதில் இருந்து வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. சராசரியாக தினமும் 105டிகிரிக்கு மேல் 108டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் கடுமையாக இருந்தது. அக்னிநட்சத்திரம் தொடங்கிய பின்னர் மேலும் அதிகமாகிவிட்டது. வெயிலின் தாக்கத்தினால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில்கோடை மழையும் பதிவாகவில்லை. மழை பெய்தால் ஓரளவுக்கு தட்பவெப்பநிலை மாறும். பிற பகுதிகளில் மழைபெய்வதால் இரவுநேரங்களில் காற்றுதான் வீசி வருகிறது. நேற்று காலை முதலே அனல்காற்றுடன்வெயில் அடித்தது. மின்விசிறியை இயக்கினால் கூட அனல்காற்று தான் அடிக்கிறது.நகராட்சிபகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்காததால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மரங்கள் இருக்கிறது.பெரும்பாலானஇடங்களில் செடிகளைக்கூட காணமுடியவில்லை. வரும்29ம்தேதி வரை அக்னிநட்சத்திர வெயில் இருக்கும். எனினும்வெயில் அளவினைப்பார்த்தால் அதனையும் தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என தெரிகிறது. பகலில் வேலைநிமித்தமாக அலைந்து கொண்டிருப்பவர்கள் வெப்பத்தை தணிப்பதற்காக கரும்புசசாறு, எலுமிச்சை சாறு, சர்பத், அருந்துகின்றனர். பழச்சாறு கடைகளுக்கும்  சென்று அதனை குடித்து கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து  தங்களது காத்து கொள்கின்றனர்.

Tags : homes ,
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...