பன்னாட்டு கருத்தரங்கில் வலியுறுத்தல் தொடர் கால்பந்து போட்டி நிறைவு

திண்டுக்கல், மே 28: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் போட்டிகள் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதன் நிறைவு போட்டியானது கடந்த சனிக்கிழமை நடந்தது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த பிரிமியர் டிவிசன் போட்டியில் ராக்போர்ட்  அணி, சோலார் அணியும் மோதின. இதில் ராக்போர்ட் அணி 2 கோல் அடித்து வென்றது. தொடர்ந்து காமராஜபுரம் கால்பந்து அணி, சோசின் சாக்கர் அணியும் மோதின. இதில்  3 கோல்கள் அடித்து காமராஜபுரம் அணி வென்றது.

பின்னர் காமராஜபுரம் அணி, சோலார் அணியும் மோதியதில் 2 கோல் அடித்து காமராஜபுரம் வென்றது. ராக்போர்ட் அணி, சோசின் சாக்கர் அணி மோதியதில் 4 கோல் அடித்து ராக்போர்ட் வென்றது. இதையடுத்து லயோலா அணி, ஸ்டார் சோலார் அணி மோதியதில் 1 கோல் அடித்து லயோலா வென்றது. சோலார் அணி, சோசின் சாக்கர் அணி மோதியதில் 0:0 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. காமராஜபுரம் அணி, ராக்போர்ட் அணி மோதியதில் 1 கோல் அடித்து காமராஜபுரம்  வென்றது. சோசின் சாக்கர் அணி, லயோலா அணியும் மோதியதில் 2 கோல் அடித்து சோசின் சாக்கர் வென்றது. ஸ்டார் சோலார் அணி, சோலார் அணி மோதியதில் 1 கோல் அடித்து ஸ்டார் சோலார் வென்றது.

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டிவிஷன் போட்டியில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி, ஸ்டாலின்  அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. இரண்டாம் டிவிசன் போட்டியில் ஜோசப் பாலி அணி, டொராண்டோ அணி மோதியதில் 2:2 கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. ரமேஷ் முருகன் நினைவு கால்பந்து அணி,  தாஸ் நினைவு கால்பந்து அணி மோதியதில்  6 கோல் அடித்து ரமேஷ் முருகன் அணி வென்றது.

ஐந்தாம் டிவிசன் போட்டியில் அன்னை ஸ்போர்ட்ஸ் அணி, பீலே அணியும் மோதியதில் 8 கோல் அடித்து அன்னை ஸ்போர்ட்ஸ் வென்றது. ரமாபிரபா கல்லூரி அணி, பட்டுமணி நினைவு கால்பந்து அணியும் மோதியதில் 1 கோல் அடித்து ரமாபிரபா கல்லூரி வென்றது. அன்னை ஸ்போர்ட்ஸ் அணி, ரமாபிரபா அணி மோதியதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. பட்டுமணி நினைவு கால்பந்து அணி, பீலே அணி மோதியதில் 5 கோல் அடித்து பட்டுமணி நினைவு கால்பந்து அணி வென்றது.

தொடர்ந்து அரசன் கால்பந்து அணி, பீலே அணி மோதியதில் 0:0 என்ற கோல் கணக்கில் சமநிலை முடிவுபெற்றது. இந்த தொடர் கால்பந்து நிறைவு போட்டிகளில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி அணி முதலிடத்தையும், காமராஜபுரம் அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது என  மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண...