நத்தம் ஸ்டேஷனில் மனு மேளா

நத்தம், மே 28: நத்தம் காவல்நிலையத்தில் எஸ்பி சக்திவேல் உத்தரவின்பேரில் புகார் மனுக்கள் குறித்த மேளா நடந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் தலைமை வகித்தார். நிலம், குடும்பம், அடிதடி சம்பந்தப்பட்ட 116 வழக்குகள் விசாரணைகளுக்கான மனுக்களாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து புகார் மனுக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. இதில் சப்இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சாந்தா மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Tags : Manu Mana ,Natham Station ,
× RELATED பழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் திட்டம் விறுவிறு