சாராய வியாபாரி உள்பட 2 பேர் குண்டாசில் கைது

சேலம், மே 28: கெங்கவல்லி சாத்தப்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் திலீபன்(24). இவர் சாராயம் விற்றதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசார், கடந்த 24ம் தேதி கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஆத்தூர் மதுவிலக்கு போலீசில் ஒரு வழக்கும், தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும் உள்ளது. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., தீபாகனிகர், கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, திலீபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். இதற்கான சார்வு சேலம் மத்திய சிறையில் உள்ள திலீபனுக்கு அனுப்பப்பட்டது. மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் குப்பண்ணா கவுண்டர் தெருவை சேர்ந்தவர் லல்லு பிரசாத்(29). இவர் அப்பகுதியில் கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., தீபாகனிகர், கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, லல்லுபிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள லல்லுபிரசாத்துக்கு அனுப்பப்பட்டது.

Related Stories:

More
>