×

சேலம், நாமக்கல், தர்மபுரியில் திமுக வெற்றி வீரபாண்டியாரின் கோட்டை என்பது, மீண்டும் நிரூபணம்

சேலம், மே 28: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: நடந்து முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்தார். கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்ட கள்ளக்குறிச்சி தொகுதி பொன்.கவுதமசிகாமணி, சேலம் தொகுதி எஸ்.ஆர்.பார்த்திபன், தர்மபுரி தொகுதி செந்தில்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி சின்ராஜ் ஆகியோர், வெற்றி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்த பகுதி மறைந்த தலைவர் வீரபாண்டியாரின் கோட்டை என்பது, மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. மேலும், தலைவர் மு.க.ஸ்டாலினின் முழக்கத்திற்கு இணங்க, ஆளும் கட்சியின் அதிகாரபலம், அளவுக்கு மீறிய பண பலத்தை கடந்து நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வெற்றியினை ஈட்டி தர முனைப்புடன் பாடுபட்ட நமது கழக நிர்வாகிகள், தோழர்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு நிர்வாகிகளுக்கும், சார்பு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : victory ,DMK ,Salem ,Namakkal ,Dharmapuri ,Veerapandian Fort ,
× RELATED திமுக வெற்றி கொண்டாட்டம்