விடுமுறை முடிவதற்கு முன்பு கோடைவிழா

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் சுணக்கம் அடைந்தன. தற்போது, தேர்தல் நிறைவடைந்துள்ளதால், கோடை விழா எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ரோகிணி கூறுகையில், “வழக்கம்போல இந்த ஆண்டும் ஏற்காட்டில் மலர் கண்காட்சி சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோடை விடுமுறை முடிவதற்கு முன்னதாகவே மலர் கண்காட்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார். வரும் திங்கட்கிழமை(3ம் தேதி) கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதற்குள் கோடை விழா நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Tags : summer festival ,holiday ,
× RELATED அதிகாரிகள் ஸ்டிரைக் மற்றும் சனி,...