×

குளித்தலை வியாபாரி கொலை வழக்கு நாமக்கல் கோர்ட்டில் வக்கீல் உள்பட 2 பேர் சரண்

நாமக்கல், மே 28: நாமக்கல் நீதிமன்றத்தில் குளித்தலை வியாபாரி கொலை வழக்கில், வக்கீல் உள்பட 2 பேர் சரணடைந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கம்மநல்லூரை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி பரமசிவம்(70). இவரது மகன் மணிவண்ணன்(25). இவர் அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பிச்சைமுத்துவின்(44) மகளை காதலித்தார். இதற்கு பிச்சைமுத்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி பரமசிவம் மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமுத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.   இந்த நிலையில், நேற்று வழக்கறிஞர் பிச்சைமுத்து, முருகானந்தம் (34) ஆகிய இருவரும் நாமக்கல் இரண்டாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி இருவரையும் வருகிற 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : bailiff dealer ,nominees ,nomination court ,lawyer ,
× RELATED திருமழிசையில் ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது