×

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி எங்கள் இலக்கு அனைவருக்கும் தடுப்பூசி

சென்னை: பூந்தமல்லி குமணன்சாவடியில் தனியார் மண்டபத்தில் பாஜ வழக்கறிஞர் பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் பால் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக, மதுரவாயலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்து வந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். தடுப்பூசிபோட வந்த மக்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை கூறிய அவர், மருத்துவர்களிடம் தடுப்பூசி இருப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ‘‘தமிழகத்தில் 3.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 65 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’’ என்றார்….

The post ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி எங்கள் இலக்கு அனைவருக்கும் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Murugan ,Chennai ,Baja Advocate Division ,Poonthamalli Gumanzavadi ,Prosecutor Division ,Dinakaran ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...