அளவுக்கு அதிகமாக சரள் மண் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிதல்

அம்பை, மே 28:  அம்பை - தென்காசி சாலையில் தாசில்தார் வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார் ரவீந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பிராஞ்சேரி அருகே மேல திடியூரில் இருந்து ஆலங்குளம்  மருதமுத்தூரை சேர்ந்த செல்வம் (48) என்பவர் 4 டன் அனுமதி சீட்டுடன் சரள் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.  சோதனையில் டாரசில் 8 டன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரளுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு