×

ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார்

மும்பை: தனது ஆணுறுப்பை தொட சொன்னதாக சினிமா இயக்குனர் ஒருவர் மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை மீடூ-வில் புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ‘மீடூ’-வில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர், அரசியல் பிரபலங்கள் மீது பல பெண்கள் புகார் அளித்தனர். அப்போது பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ராவும், சாஜித் கான் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஷெர்லின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கடந்த 2005ம் ஆண்டு என் தந்தை இறந்த சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். அப்பொழுது அவர் தனது ஆணுறுப்பை தொடச் சொன்னார். அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். உங்களின் ஆணுறுப்பை ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னது நினைவிருக்கிறது’ என்று ெதரிவித்துள்ளார்.  ஏற்கனவே மறைந்த நடிகை ஜியா கானின் சகோதரி, சாஜித் கான் மீது பாலியல் புகார் தெரிவித்ததை ெதாடர்ந்து, ஷெர்லின் தற்போது டுவிட்டர் மூலம் மீடூ புகார் கூறியுள்ளார். இவரின் டுவிட்டை பார்த்த இணையதளவாசி ஒருவர், ‘இதை ஏன் முன்பே சொல்லவில்லை’ என்று கேட்டார். அதற்கு ஷெர்லி, ‘பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு ஆதரவாக பேசுவார்கள். பாலிவுட் மாஃபியா வலிமையானது’ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் கேட்ட கேள்விக்கு, ஷெர்லி அளித்த பதிலில், ‘சாஜித் கான் தன் ஆணுறுப்பை தொட்டு ஃபீல் பண்ணச் சொன்னதுடன், தன்னை போன்று வேறு யாருக்கும் இப்படி ஒரு ஆணுறுப்பு இருக்கிறதா? என்று கேட்டார். நான் சாஜித் கான் மீது பழி போடவில்லை. இது தான் உண்மை. என் தந்தை பிரேம் சாகர் சோப்ரா இறந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தது என்பதால் நான் கவலையில் இருந்த நேரம் அது. படம் தொடர்பாக தன்னை சந்திக்க வருமாறு சாஜித் கான் அழைத்தார். அவரின் ஆணுறுப்பு பற்றி தான் அந்த சந்திப்பு என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. நான் தொட மாட்டேன் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். நான் தொடுவதற்கு பதில் நீங்களே உங்களை தொட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.  இவரது டுவிட்டர் பதிவு தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Mumbai ,Dinakaran ,
× RELATED நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு...