குளச்சலில் பரத நாட்டியம் அரங்கேற்றம்

குளச்சல், மே 28:

குளச்சல் சேவா பாரதி சார்பில் மாணவிகளுக்கு பரத நாட்டிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நாட்டிய பயிற்சி பெற்ற கருமங்கூடல் தொழிலதிபர் டாக்டர் கல்யாண சுந்தரம் மகள் வைஷ்ணவி, குளச்சல் தொழிலதிபர் பிரபாகர் மகள் கீர்த்தி மற்றும் குளச்சல் அஜி மகள் நந்தனா, பிரபு மகள் ஆதிரா பிரபு ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி  குளச்சல் சுகந்தம் திருமண மண்டபத்தில் நடந்தது. வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சுவாமி ராம கிருஷ்ணானந்தா, குளச்சல் இன்ஸ்பெக்டர் வேல்கனி, பத்தறை பிள்ளையார் சிவன் கோயில் மேல்சாந்தி கோபால கிருஷ்ணன் போற்றி, வள்ளியூர் யூனிவர்சல் இன்ஜி.கல்லூரி நிறுவன தலைவர் ஷாஜஹான், தமிழ்நாடு சக்க்ஷம் அமைப்பு தலைவர் வேலுமயில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Stories:

>