வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு

திருவள்ளூர், மே 28: திருவள்ளூர் அருகே வேலைக்கு சென்ற வாலிபர்,  பிணமாக மீட்கப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த ராமன்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்திரன்(38). சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், அன்று இரவு வீடு திரும்பவில்லை.இந்நிலையில், செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள கணேஷ் நகர் பிளாட் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து அவரது தாய் சரோஜா கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்திரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது உடலில் சிறு காயங்கள் உள்ளதால், அவரை யாராவது அடித்து கொலை செய்தனரா, வேறு காரணமா என கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வேலைக்கு சென்ற வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
 உள்ளது.

Tags : corpse recovery ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு