×

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் நாகை தொகுதியில் வெற்றி பெற்ற செல்வராஜ்(இந்திய கம்யூ.) பேட்டி

திருவாரூர், மே 25: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என நாகை தொகுதியில் வெற்றிபெற்ற இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் நாகை எம்பி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் தனக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் சரவணனை விட 2 லட்சத்து 11 ஆயிரத்து 353 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார். பின்னர் இவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தொகுதியின் பொது பார்வையாளர் நேமோ மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செல்வராஜ் கூறுகையில், நாகை தொகுதி மட்டுமின்றி திருவாரூர், நாகை, தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறுவதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் இந்த பகுதி பாலைவனமாக மாறும் என்பதால் இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதற்கும் குரல் கொடுப்பேன். இதையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முன் வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : Parliament ,Indian Communications ,Selvaraj ,
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...