அருப்புக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

அருப்புக்கோட்டை, மே 25: விருதுநகர் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி அருப்புக்கோட்டையில் நடந்தது. இந்த போட்டியினை டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், காரியாபட்டி, சிவகாசி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் இருந்து 45 பேர் கலந்து கொண்டனர். நடுவர்களாக மதுரையை சேர்ந்த ரமேஷ், விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர். மிஸ்டர் அருப்புக்கோட்டை ஆணழகனாக வடிவேல் தேர்வு செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்ட அளவிலான அயன்மென் ஆணழகனாக ராஜபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு பெற்றவர்களுக்கு அருப்புக்கோட்டை திமுக முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துவேல், மாவட்ட ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் சோலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆரஞ்ச் பிட்னஸ் சென்டர் நிர்வாகி மதன்ராஜ் செய்திருந்தார்.

Tags : District level competitor competition ,Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை, திருச்சுழியில்...