×

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல்களில் இதுவரை சாதித்த கட்சி வேட்பாளர்கள் யார்..? யார்..?

விருதுநகர், மே 25: விருதுநகர் தொகுதி 2008 தொகுதி சீரமைப்புக்கு முன் சிவகாசி பாராளுமன்ற தொகுதியாக இருந்தது. தற்போதைய விருதுநகர் தொகுதியில் சிவகாசி தொகுதியில் இருந்த விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை தொகுதிகளுடன், மதுரை மாவட்டத்தின் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளை இணைத்து 2009 தேர்தல் முதல் விருதுநகர் தொகுதியாக பரிணமித்துள்ளது. ராமநாதபுரம் தொகுதியாக (1951 மற்றும் 1957ல்) இருந்த போது: 1951ல் காங். வேட்பாளர் நாகப்ப செட்டியரும், 1957ல் காங். வேட்பாளர் சுப்பையா அம்பலமும் வெற்றி பெற்றுள்ளனர்.

சிவகாசி தொகுதியாக இருந்த போது: 1967ல் சுதந்திரா கட்சியின் ராமமூர்த்தி வெற்றி. 1971, 1977ல் காங்.யின் ஜெயலட்சுமி தொடர்ந்து இருமுறை வெற்றி. 1980, 1984ல் அதிமுகவின் சவுந்தர்ராஜனும் தொடர்ந்து இருமுறை வெற்றி. 1989ல் அதிமுகவின் காளிமுத்துவும், 1991ல் அதிமுகவின் கனககோவிந்தராஜுலு வெற்றி. அதிமுக தொடர்ந்து 4 முறை வெற்றி.

1996ல் சிபிஐ கட்சியின் அழகிரிசாமி வெற்றி. 1998, 1999ல் மதிமுகவின் வைகோவும்,2004ல் மதிமுக ரவிச்சந்திரன் வெற்றி. அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை விட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 1,54,554 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இதுவரை நடைபெற்றுள்ள 16 நாடாளுமன்ற தேர்தல்களில் காங். 6, அதிமுக 5, மதிமுக 3, சிபிஐ 1, சுந்திரா கட்சி 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

Tags : party candidates ,constituency ,Virudhunagar ,
× RELATED எடப்பாடி பிரதமராக வாய்ப்பிருக்கு…: ஜோசியம் சொல்லும் பிரேமலதா