×

டிடிவி தினகரன் வெற்றிக்கு காரணமான குக்கரில் இப்போது விசிலடிக்கவில்லை?

விருதுநகர், மே 25: குக்கர் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் குக்கர் சின்னம் பெற்ற சுயேட்சை வேட்பாளர்களால் வாக்குகளை பெறமுடியவில்லை என்பது கண்கூடாக தெளிவாகி உள்ளது. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கருதினர். அதனால் அமமுகவிற்கு குக்கர் சின்னம் வழங்க கூடாதென தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பில் நெருக்குதல் கொடுத்து குக்கர் சின்னம் கிடைக்க விடாமல் தடுத்தனர். அதை தொடர்ந்து பரிசு பெட்டகம் சின்னம் அமமுகவிற்கு வழங்கப்பட்டது.

அமமுகவிற்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டதை தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சைகளுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. குக்கர் சின்னம் கிடைத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற கணக்கில் சுயேட்சைகள் மத்தியில் குக்கர் சின்னத்திற்கு போட்டிகள் இருந்தன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் கணேஷ்குமார் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் குக்கர் சின்னம் பெற்ற கணேஷ்குமார் 1,624 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார். இதன் மூலம் குக்கர் சின்னத்திற்கு மக்கள் மத்தியில் மதிப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Tags : victory ,Dwyer Dinakaran ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...