பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம்

பாபநாசம், மே 25:  பாபநாசத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் 1ம் தேதி முதல் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை உடனே கூட்டி கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை நீரை பெற்று இந்தாண்டு ஜூன் 12ல் தண்ணீர் திறக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் சாமு தர்மராஜ் நன்றி கூறினார்.× RELATED தமிழகம் முழுவதும் மழை வேண்டி...