×

ஜூன் 6 வரை நடக்கிறது பட்டீஸ்வரத்தில் குறுவை சாகுபடிக்காக வயலுக்கு இயற்கை உரம் தெளித்து தயார்படுத்தும் பணி மும்முரம்

கும்பகோணம், மே 25: குறுவை சாகுபடிக்காக பட்டீஸ்வரத்தில் வயலுக்கு இயற்கை உரம் தெளித்து தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி முடிந்து குறுவை சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதற்காக திட்டை, அன்னப்பன்பேட்டை, திருக்கருக்காவூர் பகுதிகளில் நாற்றங்கால் அமைப்பதற்காக கோரைகள், புல்களை அகற்றும் பணி நடக்கிறது. அதேபோல் பட்டீஸ்வரம், ஆவூர், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலம் நாற்றாங்கால் விதைகளை தெளித்த நெல்மணிகள் முளைத்து பருவத்தில் காத்திருக்கின்றன.

இந்நிலையில் மின்மோட்டார் மூலம் நடவு பணி செய்வதற்காக பட்டீஸ்வரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இயற்கை உரமான மாட்டுச்சாணம், வைக்கோல், ஆட்டு கழிவுகளை வயல்களில் கொட்டி வைத்துள்ளனர். இதையடுத்து நடவு செய்யும் சில நாட்களுக்கு முன்பு வயலுக்கு தண்ணீர் விடுவர். அனைத்து இடங்களிலும் எருவை தெளித்து விடுவதால் அடியுரமாகவும், நெல் சாகுபடி அதிகமாக விளைச்சலாகும். இயற்கை உரம் தெளித்து நடவு செய்வதால் ஏக்கருக்கு கூடுதலாக 5 மூட்டைகள் விளைச்சல் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் சிலர் அருகில் உள்ள மின்மோட்டார் தண்ணீர் பெற்று கொண்டு குறுவை நடவு பணியை துவங்கியுள்ளனர். அவர்கள் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று நம்பி குறுவை நடவு பணியில் இறங்கியுள்ளனர். எனவே குறுவை சாகுபடிக்கு வயல்களை தயார்படுத்தி வரும் நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு டெல்டா விவசாயிகளை காப்பாற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Patiala ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து