×

பொன்னமராவதி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி, மே 25: பொன்னமராவதி அருகே வலையபட்டி அரசு மருத்துவமனை வழியாக பகவாண்டிப்பட்டி  செல்லும் குண்டும் குழியுமான சாலையினை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி-உலகம்பட்டி சாலை மெயின்ரோட்டில் இருந்து வலையபட்டி அரசு மருத்துவமனை வழியாக பகவாண்டிப்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்குச்சென்று வரமுடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக அரசு மருத்துவமனை, பள்ளி, திருமண மண்டபம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருவோர் தினசரி சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொன்னமராவதி நகரை ஒட்டியுள்ள இந்த சாலையினை சீர் செய்து புதிதாக தரமாக தார்போடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,Ponnamaravathi ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...