×

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரருக்கு அஞ்சலி

அரியலூர்,மே25:  அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழஎசனை கிராமத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் நடராஜன் என்பவர் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் உயிரிழந்தார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு திருமானூர் ஒன்றிய முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடராஜன் உருவபடத்துக்கு  மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திரளானோர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Tags : resident ,Kargil ,army ,
× RELATED சிக்கிமில் பனிச்சரிவு: ராணுவ அதிகாரி, வீரர் புதைந்து பலி