×

பயணிகள் எதிர்பார்ப்பு செந்துறை பகுதியில் வறட்சியால் காய்ந்து வரும் தேக்கு மரங்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பலூர், மே 25:  சிறுவாச்சூர்  மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்  நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில்  மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. சிலப்பதிகார காலத்தில் தவறான அரசநீதியால் கணவனை இழந்த ஆத்திரத்தில் மதுரையை எரித்தக் கண்ணகி, சுற்றித் திரிந்துவந்த நிலையில் சிறுவாச்சூரில் வந்துதங்கி இளைப்பாறியபோது சினம் தணிந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகவும், ஆதிசங்கரர் வழிபாடுசெய்ததும், ஊமையும், செவிடும் நீக்கும் சக்திநாயகியாய் நின்று அருளுவதும், மலடுநீக்கி மக்கட்பேறு அளிக்கும் வரப் பிரசாத அன்னையாய் சிறந்து நிற்பதும், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற வற்றின் இடர் அகற்றுவதுமான இனிய சக்திதெய்வமாய் விளங்கும் மதுரகாளியம்மன் குடி கொண்டுள்ள இந்தக்கோயிலின் திருத்தேரோட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதேபோல் நடப்பாண்டும்   கடந்த 7-ம்தேதி இரவு 11மணிக்குத்தொடங்கி 8-ம்தேதிகாலை 10 மணிவரை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. அதனையடுத்து 14-ம்தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெரியசாமி மலையிலும், அதிகாலை மதுரகாளியம்மன் கோயிலிலும் காப்புகட்டுதல் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து 15-ம் தேதி சந்திமறித்தலும், 16-ம் தேதி குடிஅழைத்தலும், 17-ம் தேதி சிவவழிபாட்டுடன் அன்னவாகனத்தில் சாமி திருவீதியுலாவும்நடந்தது. மேலும்,18-ம் தேதி பெருமாள்வழிபாடும், 19-ம் தேதி மாரியம்மன் வழிபாடும், 20-ம் தேதிஅய்யனார்வழிபாடும், 21-ம் தேதி மலைவழிபாடும் நடத் தப்பட்டது.

இந்நிலையில்22ம் தேதி   திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி, மாலை 4 மணிக்கு பெருமாள் கோயிலில் இருந்து அம்பாளுக்கு திருமாங்கல்ய சீர் வரிசை மங்கள வாத்தியங்களுடன் கொண்டுவரப்பட்டது.மாலை 5 மணிக்குமேல் உற்சவ அம்பாளுக்கு கோயிலில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.  இரவு 10 மணிக்குமேல் வெள்ளிக்குதிரைவாகனத்தில் அம்பாள் மற்றும் பரிவார தெய் வங்களுடன் திருவீதியுலாநடைபெற்றது. திருவிழாவின் முக்கிய   நிகழ்வான தேரோட்டம் நேற்று  முன்தினம் காலை10 மணிக்கு மேல் தொடங்கி ரத வீதிகளில் நடைபெற்றது. பின்னர்சோலை முத்தையன் கோவிலில் சிறப்புவழிபாடு நடந்தது. தேரோட்டத்தில் சிறுவாச்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களான   அய்யலூர், பெரம்பலூர், செல்லியம்பா ளையம்,நொச்சியம், செட்டிகுளம்,  விளாமுத்தூர், புதுநடுவலூர்,வெள்ளனூர், மருதடி, காரை, புதுக் குறிச்சி, நெடுவாசல், பாடாலூர்  உள்ளிட்டப் பல்வேறுகிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Tags : Travelers ,Throwing Area ,Madurakaliyamman Temple ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை