×

வருசநாட்டில் வேணி அம்மன் கோயில் திருவிழா

வருசநாடு, மே 25: வருசநாட்டில் வேணிஅம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. வருசநாடு கிராமத்தில் வேணி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், பானை உடைத்தல், சாக்கு போட்டி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், பெண்களுக்கான பாட்டிலில் நீர் நிறைத்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.இவ்விழாவையொட்டி கோயிலில் பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.  இதையடுத்து முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் வேணிராஜ், கோபி, மூர்த்தி, ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கிராமபொதுமக்கள் கூறுகையில்,`` ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி, மாதங்களில் வேணி அம்மன் கோயில்திருவிழா நடைபெறும் இதன் முக்கிய நோக்கமே வருசநாடு பகுதியில் பசுமை உண்டாக வேண்டும். மழை அதிகமாக பெய்ய வேண்டும் என்பதே திருவிழாவின் நோக்கமாகும்’’ என்றார்கள்.

Tags : Vanni Amman Temple Festival ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு