×

தேனி மக்களவை தேர்தல் ஓபிஎஸ் சொந்த ஊரில் சரிந்தது அதிமுகவின் வாக்கு வங்கி

உத்தமபாளையம், மே 25:  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். 6 சட்டசபையில் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேனி மக்களவை தேர்தலில் 6 சட்டசபை தொகுதிவாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:
சோழவந்தான் சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)             - 81,652
ஈவிகேஎஸ்.இளங்கோவன்(காங்.)              - 58,858
தங்க தமிழ்செல்வன்(அமமுக)                -  12,098
சாகுல்அமீது(நாம்தமிழர்)                    -   5,762
ராதாகிருஷ்ணன்( மநீம)                     -   3,113
உசிலம்பட்டி சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)              - 88,207
ஈவிகேஎஸ்.இளங்கோவன்(காங்)               - 64,062
தங்கதமிழ்செல்வன்(அமமுக)               - 34,239
சாகுல்அமீது(நாம்தமிழர்)                      -  4,415
ராதாகிருஷ்ணன்( மநீம)                    - 1,461
ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)            - 82,499
ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்.)            - 75,428
தங்கதமிழ்செல்வன் (அமமுக)               - 29,255
சாகுல்அமீது (நாம்தமிழர்)                  -  3,590
ராதாகிருஷ்ணன்( மநீம)                       -  2,045
பெரியகுளம் சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அ.தி.மு.க.)         - 75,348
ஈவிகே.எஸ்.இளங்கோவன்(காங்)               - 81,799
தங்கதமிழ்செல்வன் (அமமுக)                 - 25,100
சாகுல்அமீது (நாம்தமிழர்)                     - 3,935
ராதாகிருஷ்ணன் (மநீம)                       - 3,867
போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)              -  94,279
ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்.)              -  67,791
தங்கதமிழ்செல்வன் (அமமுக)              - 21,041
சாகுல்அமீது (நாம்தமிழர்)                     -  4,925
ராதாகிருஷ்ணன்( மநீம)                       -  3,212
கம்பம் சட்டசபை தொகுதி
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)           - 81,474
ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்.)           - 76,847
தங்கதமிழ்செல்வன்(அமமுக)                  - 21,430
சாகுல்அமீது (நாம்தமிழர்)                     -  4,811
ராதாகிருஷ்ணன்( மநீம)                       -  3,010

பெரியகுளம்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊர். இங்குதான்  இரண்டு முறை வெற்றி பெற்றார். ஆனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  இவரது மகன் ரவீந்திரநாத் குமாரை விட அதிகபட்சமாக காங்கிரஸ் வேட்பாளர் 6,451  வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற உதவிய சட்டமன்ற தொகுதிகள் வருமாறு: தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான் சட்டசபை தொகுதியில் மட்டும்,  காங்கிரஸ் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் 22,794  வாக்குகளும், ஆண்டிபட்டியில் 7,071 வாக்குகளும், உசிலம்பட்டியில், 24,145  வாக்குகளும் போடியில், 26,488 வாக்குகளும், கம்பத்தில் 4,627 வாக்குகளும் பெற்றுள்ளார்.  இந்த வாக்குகள் அவரது வெற்றிக்கு வழிவகுத்துள்ளன.

Tags : Lok Sabha ,DMK ,Theni Lok Sabha ,hometown ,OBC ,
× RELATED மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கடிதம்